
இங்கு வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 161.1 -ஆவது கிலோமீட்டரில் சுங்கை ஜாவி அருகே நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில், காரோட்டியான 29 வயது இந்திய இளைஞர் செந்தூரன் த/பெ ரெங்கையா சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினார்.
இக்கோர விபத்து நேற்று மாலை 6.01 மணியளவில் நிகழ்ந்ததாக தென் செபராங் பிறை மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் லீ
சோங் செர்ன் கூறினார்.
சம்பவத்தின் போது இரும்பு ஏற்றிச் சென்ற
லோரியின் பின்னால்,காலியாக சென்ற லோரி ஒன்று மோதி
விபத்துக்குள்ளாகி நின்றது.அப்போது பின்புறம் வேகமாக வந்த
கார்,கட்டுப்பாட்டை இழந்து லோரியின் ஒன்றின் பின்னால் மோதியதாக
அவர் தெரிவித்தார்.
நிபோங் திபாலைச் சேர்ந்த அந்த இளைஞர்
சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.கார்
முற்றாக நசுங்கி தீயில் சாம்பலானது.
