28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

நிலவரங்கள் குறித்து துன் மகாதீருடன் பேச நிதியமைச்சர் தெங்கு சப்ருல் தகுதியானவரா ?

தோல்விக் கண்டுள்ள பெரிகாத்தான் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள கோவிட் -19 தொற்று பாதிப்பு நிலவரங்கள் குறித்து,முன்னாள் பிரதமர் துன் மஹாதீருடன் பேசுவதற்கு நிதியமைச்சர் தெங்கு சப்ருல் அப்துல் அஸீஸ் உகந்தவரல்ல என்று பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.
தற்போது புதிய வகை தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது.மேலும் கடந்த ஓராண்டுகளாக நாட்டில் நோய் தொற்றினால் தற்போதைய அரசாங்கம் செயலிழந்து கிடக்கிறது என்றார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோவிட் -19 தொற்றை கையாள்வதற்கான பல்வேறு திட்டங்கள் மகாதீரிடம் இருக்குமென தேசியக் கூட்டணி தலைவர்கள் பலரின் அறிக்கை தம்மை வியப்பில் ஆழ்த்துவதாக குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் பொருளாதாரம்,சமூகம் போன்ற பிரச்சனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் அவரின் நடவடிக்கை பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பி.இராமசாமி தெரிவித்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் மூலமாக தேர்தெடுக்கப்படாத தெங்கு சப்ருல் நாட்டின் நிதி நிலைமையை நிர்வகிக்க தகுதியானவரா என அவர் கேள்வியெழுப்பினார்.பின்புற வாசல் வழியாக வந்த அரசாங்கம் எதையும் செய்ய தயங்காது என அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles