27.9 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

சடலங்களை வைக்க கொள்கலன் கேட்டு செலாயாங் மருத்துவமனை முறையீடு

🔥 Views : 10
👁 Reading Now : 49

கோவிட் -19 இறப்புகள் அதிகரித்து வருவதால், உடல்கள் வைக்க இடப் பற்றாக்குறை நிலவி வருகிறது என்ற சிலாங்கூர், செலாயாங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவு தெரிவித்துள்ளது. கோவிட் -19 தொற்று காரணமாக அதிகரித்து வரும் சடலங்களை வைக்க மருத்துவமனையில் போதிய இடம் இல்லை என்று கூறப்படுகிறது.
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை பெற்ற புதியக் கொள்கலனைப் போல் நாங்களும் விண்ணப்பித்தோம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் ஊழியர் சொன்னார்.
புதியக் கொள்கலன்களுக்கு ஒதுக்கீடு இல்லாததால், டிசம்பர் வரை காத்திருக்க வேண்டி வரும் போல் தெரிகிறது.
இருப்பினும், அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு இருந்தால் அது விரைவில் நடக்கலாம்,” என்று அவர் கூறினார்.
நேற்று 47 உடல்களைப் பெற்றோம், அவற்றில் கோவிட்-19 அல்லாத 16 உடல்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles