31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சிலாங்கூரில் இதுவரை 413 குடும்பங்கள் கோவிட் உதவி தொகைக்கு விண்ணப்பம்

🔥 Views : 10
👁 Reading Now : 20

நோய்த்தொற்றால் மரணமடைந்த 413 குடும்ப உறுப்பினர்கள் 1,000 வெள்ளி உதவித்தொகைக்கு விண்ணப்பங்களை செய்துள்ளனர்.
இதில் 12 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
விண்ணப்பம் அங்கீக்கப்பட்ட 14 நாட்களுக்குள் உதவித் தொகை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய தகவலைகளை முழுமையாக தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட் காரணமாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணங்கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கி முதல் வரவேற்கப்படுகிறது. வரும் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வரை இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம். மேல் விபரங்களை https://www.selangorprihatin.com என்ற அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
நோய்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்காக கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் 15 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 9 ஆம் தேதி அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles