
நோய்த்தொற்றால் மரணமடையும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் உடல்களை விரைந்து தகனம் செய்தற்கு மேலும் இரண்டு மின் சுடலைகள் ஏற்பாடு செய்யப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
அதிக கட்டணம் இல்லாமல் உடல்களை விரைந்து தகனம் செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
தற்போது கிள்ளான் சிம்பாங் லீமா மயானத்தில் இறந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுகிறது.
இதில் ஒரு மீன் சுடலை இயந்திரம் பழுதடைந்துள்ளது.
ஆகவே சடலங்களை விரைந்து தகனம் செய்வதற்கு மேலும் இரண்டு மீன் சுடலைகளை அதிகரிக்க விரும்புகிறோம்.
இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்ய
அரசு சார்பற்ற இயக்கங்களின் உதவியும் தேவைப்படுவதாக அவர் சொன்னார்



