
மக்கள் பணி ஆற்றுவதில் ஐபிஎப் கட்சி ஒருபோதும் ஓயாது
ஐபிஎப் கட்சி தனது கடமையிலிருந்து விலகி நிற்காமல்,தமது மக்கள் சேவையினை ஆற்றி வரும் என்று பேரா மாநில ஐபிஎப் தலைவர் வி.மாணிக்கம் கூறினார்.
ஏழை இந்திய சமுதாயத்துக்காக கட்சியின் அன்றைய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனின் கொள்கைக்கு ஏற்ப ஐபிஎப் கட்சி.இந்நாட்டு இந்திய சமுதாயத்துக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.
தேசிய முன்னணி மூலம் கிடைக்கும் உதவிகளைப் பெற்று இன்னல்படும் குடும்பங்களுக்கு உதவி வருவதாக சொன்னார்.
பேரா மாநில ஐபிஎப் பொருளாளர் சுப்பிரமணியத்தின் ஆதரவோடு,தொகுதி தலைவர்களின் ஒத்துழைப்போடு,இந்த ஏழை சமுதாயத்துக்கு உதவும் கட்டுப்பாட்டிலிருந்து ஐபிஎப் கட்சி ஒரு போதும் பின் வாங்காது என்று வி.மாணிக்கம் கூறினார்.
பேரா மாநில அரசாங்கம் வழங்கிய உணவுக் கூடைகளை பாரிட் புந்தார் தொகுதி இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டது
பாரிட் புந்தார் தொகுதி ஐபிஎப் தலைவர் தாமோதிரன் ஏற்பாட்டில்,இங்குள்ள தாமான் செமாராக்,தாமான் கிரியான்,டென்னிஸ் டவுன் உட்பட இன்னும் சில பகுதி குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது. பேரா மாநில ஐபிஎப் பொருளாளர் சுப்பிரமணியம்,தொகுதி மகளிர் ஆகியோரும் ஏழைகளுக்கு உதவினர்



