
பல ஆண்டுகளாக பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகளை எதிர்நோக்கி
வந்த பினாங்கு மத்திய செபராங் பிறை,புக்கிட் தெங்கா அருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயம், நீதிமன்ற ஆணையின்படி இன்றுக் காலை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
முந்தைய நிர்வாகத்தில் நிகழ்ந்த பல்வேறு பிரச்சனைகளால்,அதிருப்தியடைந்த இவ்வட்டார மக்கள் ஆலயத்தை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டுமென போராட்டங்களை நடத்தினர்.
இன்று நடைபெற்ற
எளிய நிகழ்வு ஒன்றில்,மாநில தேசிய சங்கங்களின் பதிவு இலாகா
இயக்குனரின் முன்னிலையில் ஆலயம் இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி தலைமையில் ஆலய
திருப்பணிகளும்,கும்பாபிஷேகமும் மிகவும் விமரிசையாக நடைபெற
ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்
நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.



