
நோய்த்தொற்றால் வருமானம் இழந்திருக்கும் சுங்கைவே டேசா மெந்தாரியைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு பொருள் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
உலோகப் பொருள் மறுசுழற்சி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சேது, ரெங்கசாமி, ராஜன் மற்றும் சென்ராஜ் ஆகியோர் இந்த 300 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.
இந்த குடியிருப்பில் வசித்து வரும் பத்து புளோக்கைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று உதவிகள் வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர் .
மக்கள் உணவுக்காக இன்னமும் சிரமப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவிகளை வழங்கி இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.




