
கெடா மாநிலத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 705ஆக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜொகூர் மாநிலமும் தொடர்ந்து இரண்டாவது நாளாக 800-க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று சம்பவங்களை பதிவு செய்துள்ளது.
இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 7,148 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 6,439 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 435 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
நேற்று 31 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 18 பணியிடத் திரளைகள் ஆகும்.



