
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் எஸ்ஓபி விதியை மீறி காரை ஓட்டி பரிசோதனை செய்த கெடா மந்திரி முகமட் சனுசி முகமட் நோருக்கு 1 ,500
வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தா ஸ்டார் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் அவர் அந்த தொகையை செலுத்தினார்.
ஜூன் 6 ஆம் தேதி செபராங் பிறை,புக்கிட் மெர்தாஜாம் ஆட்டோ சிட்டியில் கார் விற்பனை மையமொன்றில் காரை ஓட்டி அவர் பரிசோதித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
