
நோய்த்தொற்று தாக்கத்தினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி செல்லவில்லை. இப்போது முதன் முறையாக வரும் ஜூலை 22ஆம் தேதி திருச்சி நோக்கி சிறப்பு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவதாக கிள்ளான் கே பி எஸ் டிராவல்ஸ் உரிமையாளர் கே.பி. சாமி தெரிவித்தார்.

வரும் ஜூலை 22ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு கேஎல்ஐஏ விமான நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி புறப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தரை இறங்குகிறது .
பின்னர் அந்த விமானம் மலேசியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.30 மணிக்கு சிப்பாங் விமான நிலையம் வந்தடையும் என்று அவர் கூறினார்.
இதனிடையே பொதுமன்னிப்பு திட்டத்தின் கீழ்
மலேசியாவில் கூடுதலாக தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் 500 வெள்ளி அபராதம் செலுத்தி நாட்டில் இருந்து வெளியேற குடிநுழைவு இலாகா அனுமதி வழங்கியுள்ளது. அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய பிரஜைகளுக்கு சிறப்பு முகப்பிட சேவையும் அமைக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்ப விரும்பும் இந்திய பிரஜைகள் விமான டிக்கெட் மற்றும் கோவிட் மருத்துவ பரிசோதனையுடன் 500 வெள்ளி அபராதம் செலுத்தி நாடு திரும்பலாம் என்றார் அவர்.

கேபிஎஸ் டிராவல்ஸ் மற்றும் எஸ் எம் ஆர் உரிமையாளர் மனோ ஆகியோர் இந்த சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆகவே தாயகம் திரும்பும் இந்திய பிரஜைகள் கேபி சாமி 016- 2626755 அல்லது கேபிஎஸ் டிராவல்ஸ் நிர்வாகி கவின் 016 – 2229341 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கேபிஎஸ் டிராவல்ஸ் உரிமையாளர் கேபி சாமி ஏற்பாடு செய்த 11ஆவது சிறப்பு விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது



