30.5 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் இந்தியர்களுக்காக புதிய மண்டபம் கட்டப்படும்

🔥 Views : 48
👁 Reading Now : 65

பினாங்கு மத்திய செபராங் பிறை,புக்கிட் தெங்கா அருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் முடிவுற்றதும்,புக்கிட் தெங்கா மற்றும் சுற்றுவட்டார இந்து பெருமக்களின் பயன்பாட்டிற்காக புதிய ஆலய மண்டபமும் கட்டப் படும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்
நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன் தெரிவித்தார். பட்டர்வொர்த் ஸ்ரீ
மாரியம்மன் மண்டபத்தை விட,பெரிய அளவில் பிரமாண்டமான மண்டபம்
புக்கிட் தெங்கா அருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில்
கம்பீரமாக கட்டப்படும். இந்த
மண்டபம் இந்து மக்களுக்கு ஒரு பெருமை சேர்க்கும் சின்னமாக
விளங்குமென தெரிவித்தார். ஆலயத்
திருப்பணிகள் நிறைவுப் பெற்றவுடன் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி தலைமையில் இவ்வாண்டு இறுதிக்குள் ஆலய
கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறும் என்றார்.அதன் பின்னர் ஆலய
மண்டப நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கும் என டத்தோ எம்.இராமச்சந்திரன்
மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு
பிரச்சனைகளை எதிர்நோக்கி வந்த இந்த ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை
தற்போது பேராசிரியர் பி.இராமசாமி தலைமையிலான பினாங்கு இந்து
வாரியம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles