26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

சிரமப்படும் 25 டாக்ஸி ஓட்டுனர்களுக்கு சகாபாட் சிலாங்கூர் உதவிக்கரம்

🔥 Views : 9
👁 Reading Now : 42

நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானத்தை இழந்துள்ள டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் சகாபாட் சிலாங்கூர் இயக்கம் நேற்று 25 ஓட்டுனர்களுக்கு உணவு கூடைகளை வழங்கி ஆதரவுக்கரம் நீட்டியது.
கோலாலம்பூர் சிலாங்கூர் கும்புலான் ஜூவாரா லீமா இந்திய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் காந்தி சந்திரசேகரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சகாபாட் சிலாங்கூர் இயக்கம் உதவிக்கரம் நீட்டி யுள்ளது.
ரெமோ பைக்கர்ஸ் இயக்கத்துடன் இணைந்து சகாபாட் சிலாங்கூர் இயக்கம் வழங்கிய இந்த உணவு கூடைகளை 25 டாக்ஸி ஓட்டுனர்கள் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மலேசியர்கள் நோய்த்தொற்று தாக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
சாகாபட் சிலாங்கூர் இயக்கம் இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகளை வழங்கி இருப்பதாக அதன் தலைவர் சுப்பிரமணியம் புலேந்திரன் தெரிவித்தார்.
மக்கள் நடமாட்டம் உத்தரவால் டாக்ஸி ஓட்டுனர்கள் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அந்த வகையில் இவர்களுக்கு உதவிகளை வழங்கி இருக்கிறோம் என்று சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதனிடையே கஷ்டப்படும் காலத்தில் எங்களுக்கு உதவிய சகாபாட் சிலாங்கூர் இயக்கம் மற்றும் ரொமோ பைக்கர்ஸ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கோலாலம்பூர் சிலாங்கூர் குமபுலான் ஜூவாரா லீமா இந்திய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் பிரேம் நசீர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles