26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

முதியோர்கள் மத்தியில் நோய்த்தொற்று சற்று இறக்கம் காண்கிறது!

🔥 Views : 13
👁 Reading Now : 69

சுங்கை பூலோ மருத்துவமனையின் புதிய தகவல்களில் முதியோர்கள் மத்தியில் புதிய நோய்தொற்று சற்று இறக்கம் கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்களிடையே கடுமையான தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா கூறுகையில்
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட தடுப்பூசி இயக்கத்திற்கு ஏற்ப இந்த நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது என்றார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பலன் 22 ஆம் நோய்த் தொற்று வாரம் முதற்கொண்டு தெரியத் தொடங்கியுள்ளது.
21ஆவது நோய்த் தொற்று வாரத்தில் 217 பேராக இருந்த 60 முதல் 79 வயது வரையிலான நோயாளிகளின் எண்ணிக்கை 23ஆவது வாரத்தில் 125 ஆகவும் நடப்பிலுள்ள 28வது நோய்த் தொற்று வாரத்தில் 119 ஆகவும் குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles