26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

கோவிட் நோயாளிகளின் சடலங்களை குறைக்க தகனம் செய்யும் நடவடிக்கை தீவிரப் படுத்தப்படுகிறது!

🔥 Views : 9
👁 Reading Now : 23

கோவிட் நோய்த் தொற்றினால் மரணம் அடைந்தவர்களின் சடலங்கள் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்களின் எண்ணிக்கையைக் குறைக்க தகனம் செய்யும் முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்களால் நிர்வகிக்கப்படும் நான்கு மின்சுடலைகளில் கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லீம் அல்லாதோரின் நல்லுடல்களை விரைந்து தகனம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
ஷா ஆலம் மாநகர் மன்றம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், கிள்ளான் நகராண்மைக்கழகம் ஆகிய நான்கு ஊட்ராட்சி மன்றங்களில் மின்சுடலைகள் உள்ளன.
சிப்பாங் நகராண்மைக்கழக பகுதியில் மேலும் ஒரு மின்சுடலையை நிர்மாணிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Emco ஆணை காரணமாக தடைபட்டுள்ள அதன் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த அனுமதி கோரியுள்ளோம்.
அந்த மின்சுடலை தயாரானவுடன் நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணியை மேலும் விரைவாக மேற்கொள்ள முடியும். கிள்ளான் நகராண்மைக் கழகம் வசமுள்ள சிம்பாங் லீமா மின்சுடலைகளில் இரண்டு பழுதான நிலையில் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது..
கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் நல்லுடல்களை தகனம் செய்யும் பணியை குறைந்த கட்டணத்தில் மேற்கொள்வது தொடர்பில் தனியார் மின்சுடலை நிர்வாகத்தினருடன் மாநில அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles