33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

ஹைப்ரிட் முறையில் சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத் தொடரா?

🔥 Views : 9
👁 Reading Now : 23

புதிய வகை நோய்த் தொற்றுகள் பரவி வரும் காரணத்தால் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் பட்சத்தில் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தை ஹைப்ரிட் முறையில் நடத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
ஹைப்ரிட் எனப்படும் நேரடி பங்கேற்பு மற்றும் இயங்கலை வாயிலாக சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான சூழல் ஏற்படும் பட்சத்தில் அதற்காக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தை இயற்றுவதற்கான தீர்மானத்தை முன்மொழியவிருப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று தெரிவித்தார்.
ஹைப்ரிட் முறையிலான சட்டமன்றக் கூட்டம் சட்டப்பூர்வமான முறையில் நடைபெறுவதற்கு ஏதுவாக உறுப்பினர்கள் அனைவரும் முன்னதாக அவைக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்த சட்டத் திருத்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் ஹைப்ரிட் முறையில் கூட்டம் நடைபெறும்.
நோய்த்தொற்று பரவலைத தடுப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles