24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி தொழுகையில் ஈடுபட்ட 49 பேருக்கு தடுப்புக்காவல்

🔥 Views : 29
👁 Reading Now : 33

எம்சிஓ முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி ஈகைப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 48 வங்காளதேச ஆடவர்கள் உட்பட உள்நாட்டு ஆடவர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இன்றுக் காலை புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தப்பட்டனர்.
போலீசாரின் மேல் விசாரணைக்காக 20 வயதிலிருந்து 43 வயதுக்குட்பட்ட 48 வங்காளதேச ஆடவர்களுக்கு இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கும் 64 வயதான உள்நாட்டவருக்கு இன்று தொடங்கி 3 நாள் தடுப்புக்காவலும் பெறப்பட்டது.
நேற்றுக் காலை சுமார் 8 .00 மணியளவில் மத்திய செபராங் பிறை,தாமான் பெலாங்கி அடுக்குமாடி குடியிருப்பின் பள்ளிவாசல் வெளி வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 200 போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles