24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

போலீஸ் நிலையத்தில் கும்மாளம் சப் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், நான்கு பெண்கள் உட்பட 8 பேர் கைது

🔥 Views : 26
👁 Reading Now : 64

காஜாங் போலீஸ் நிலையத்தில் இரண்டாவது மாடியில் கைதானவர்களுடன் மதுபானம் மற்றும் போதை நீரை அருந்தி கும்மாளம் அடித்த சம்பவம் தொடர்பில் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ,3 போலீஸ்காரர்கள், 4 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் முக்கியமான போலீசார் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் அந்தப் பெண்களுடன் பாட்டு பாடி கொண்டிருந்தனர் என்று புக்கிட் அமான் உயர்நெறி கட்டொழுங்கு இயக்குனர் டத்தோ அஸ்ரி அமாட் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் மதுபானங்கள் போதை நீர் போத்தல்கள் ஒலிபெருக்கி டிஸ்கோ விளக்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles