26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

அன்வார் பிரதமராக வருவதை விரும்பினேன்!

🔥 Views : 9
👁 Reading Now : 27

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதை விரும்பினேன். ஆனால் அதற்குள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்காத்தான் ஹரப்பானை கவிழ்த்துவிட்டு பிரதமராகி விட்டார் என்று அதிர்ச்சித் தகவலை துன் டாக்டர் மகாதீர் இன்று வெளியிட்டார்.
அன்வார் பிரதமராக வருவதற்குள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்காத்தான் ஹரப்பானை கவிழ்த்துவிட்டார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்துவிட்டால் தனக்கு வேறு வழி இல்லை என்பதால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்காத்தான் ஹரப்பானை கவிழ்த்தார்.
நான் பதவி விலகியதும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவார் என்று வாக்குறுதி வழங்கி இருந்தேன்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வந்தால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் துணைப் பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று நினைத்தேன்.
நாட்டின் தலைவராக பதவி வகிக்க தனக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் போகலாம் என்பதால் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பக்காத்தான் ஹரப்பானை கவிழ்த்து விட்டு பிரதமர் ஆனார்.
அம்னோவுடன் இணைந்து பணியாற்ற டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விரும்பவில்லை.
ஆனால் கடைசியில் அவர் அம்னோவுடன் கைகோர்த்தார் என்று துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியை இழந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டதாக அவர் சொன்னார்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசினை பயன்படுத்தி நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுதலையாக அம்னோ தலைவர்கள் முயன்றனர்.
ஆனால் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மூசா அமான் மற்றும் தெங்கு அட்னான் வழக்குகளில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலையிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles