33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் சபாநாயகர் பதவி விலக வேண்டும்!

🔥 Views : 7
👁 Reading Now : 53

வரும் ஜூலை 26ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் மூன்று நிபந்தனைகளை பக்கத்தான் ஹரப்பான் விதித்துள்ளது.
ஒருவேளை இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடியாத பட்சத்தில் சபநாயகர் பதவியை துறக்க வேண்டும் என்றும் பக்கத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் 80 உறுப்பினர்களுக்கு மட்டும் வாய்ப்பை நிராகரிக்கிறோம்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து உறுப்பினர்களும் அவையில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
அமைச்சர்களின் தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு மாமன்னர் ஆற்றும் உரையின் மீதும் விரிவான அளவில் விவாதம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது இரண்டாது நிபந்தனையாகும்.
தேசிய மீட்சித் திட்டம், அவசரகாலப் பிரகடனம், அவசரகாலச் சட்டங்கள், தடுப்பூசி திட்ட அமலாக்கம், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைள், பொருளதார மீட்சி மற்றும் மக்களின் இன்னலைப் போக்கும் உத்தவாதம் ஆகிய விவகாரங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பது 3ஆவது நிபந்தனையாகும்..
இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடியாது என கருதும் பட்சத்தில் மக்களைவை சபநாயகர் பதவியை துறக்க வேண்டும் என்றும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles