25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

துன் மகாதீரின் கட்டளைக்கு இணங்காததால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன்!

🔥 Views : 34
👁 Reading Now : 22

அம்னோவில் இருந்து வெளியேறும்படி துன் டாக்டர் மகாதீரின் கட்டளைக்கு இணங்காததால் பழிவாங்கப்பட்டதோடு நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டதாக கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெரிவித்தார்.
நான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதற்கு துன் மகாதீர்தான் காரணம். இதில் மூடி மறைக்க எந்த ரகசியமும் இல்லை.
அம்னோவில் இருந்து வெளியேறும்படி எனக்கு துன் மகாதீர் கட்டளையிட்டார் அதனை பின்பற்ற மறுத்ததால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாக அவர் என்று தெரிவித்தார்.
துன் டாக்டர் மகாதீரை போல் நான் சொத்துக்களை சேர்க்கவில்லை.
கடந்த 2000ம் ஆண்டில் பிரதமர் துறை துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது 9 கோடியே 80 லட்சம் வெள்ளி சொத்துக் கணக்கை நான் அறிவித்த போது துன் மகாதீர் அதிர்ச்சி அடைந்தார் என்று அவர் கூறினார்.ஸ
பல குத்தகைகள் வழி துன் மகாதீரின் பிள்ளைகள் இன்று மிகப் பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles