
தடுப்பூசி போடும் இயக்கத்தின் கீழ் நேற்று ஒரே நாளில் மலேசியாவில் 5 லட்சத்தை 7 ஆயிரத்து 50 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
இதில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 977 பேருக்கு முதல் தடுப்பூசியும் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 73 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டதாக அவர் சொன்னார்.
பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில் நேற்று தான் முதன் முறையாக ஒரே நாளில் 5 லட்சம் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
