25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த வீரம்மாவுக்கு கேசவன் உதவி!

🔥 Views : 27
👁 Reading Now : 34

சுங்கை சிப்புட் கம்போங் செந்தோசாவில் வசித்து வரும் வீரம்மா தண்ணீர்மலை தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் பெரும் அவதிப்பட்டு வருகிறார்.
வாரத்திற்கு மூன்று முறை சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்புக்கு 250 வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.
மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இவரால் இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் இருக்கிறார். இவரின் கணவருக்கும் தற்போது வேலை இல்லை.
இவரின் இல்லத்திற்கு விரைந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ். கேசவன் தமது சார்பில் ஆயிரம் வெள்ளியை வழங்கி உதவி புரிந்தார்.
கடந்தாண்டில் இவர் குடியிருக்கும் வீட்டையும் 15,000 வெள்ளிக்கு கேசவன் பழுது பார்த்து கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பலமுறை உதவிகள் செய்திருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வீரம்மா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles