
பெர்சத்து கட்சியின்
11லட்சத்து 20,000 வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் விசாரணை கோரியிருக்கிறார்
சைட் சாடிக்கிற்கு 3 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஜாமின் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உத்தரவாத தொகையாக 80,000 வெள்ளியை செலுத்தி இருக்கும் இவர் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் 2 லட்சத்து 50,000 வெள்ளியை செலுத்த வேண்டும்.
இந்த வழக்கு முடிவடையும் வரை அவர் ஒவ்வொரு மாதமும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜராக வேண்டும். மேலும் தனது அனைத்துலகக் அழைப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஜாமின் தொகையை செலுத்த சைடு பொதுமக்களிடம் நிதி திரட்டும் இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில்
சார்பில் பிரபல வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ ஆஜராகியுள்ளார்.
