
“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு ஏற்ப சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் பசியை போக்க ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உணவு உதவித் திட்டத்தை தொடங்கியுள்ளார். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சுங்கை சிப்புட் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உணவு உதவித் திட்டம் மலேசிய இந்திய இளைஞர் மேம்பாட்டு அறவாரியத்தின் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் ம.இ.கா ஆதரவில் ஜூ்லை 22ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. நேச முதல் 600 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இங்குள்ள மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
