30.3 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

ஹாஜிப் பெருநாளில் ஒன்றுக் கூடிய 25 வங்காளதேச ஆடவர்களுக்கு அபராதம்

🔥 Views : 11
👁 Reading Now : 69

எஸ்ஓபியை கடைப்பிடிக்காமல் ஒன்றுக் ஈகைப் பெருநாளில் ஒன்று கூடிய
25 வங்களாதேச ஆடவர்களுக்கு மொத்தம் 125,000 வெள்ளி அபராதத்தை ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட ஈகைப் பெருநாளின் போது,பத்து மாவுங்,தாமான் டேசா முத்தியாராவில் வீடொன்றில் இரவு 9 .00 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 ,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் எஸ்ஓபி மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி அவர்கள் வீடொன்றில் ஒன்றுக் கூடி விருந்தில் கலந்துக் கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.
கைது செய்யப்பட்ட 23 வயதிலிருந்து 41 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் கட்டுமான நிறுவனமொன்றில் குத்தகைத் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles