32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கஷ்டப்படும் மக்களுக்கு இந்து ஆலயங்கள் தங்களின் சமூக கடப்பாட்டை காட்ட முன் வர வேண்டும்!

🔥 Views : 19
👁 Reading Now : 50

இந்த கோவிட்-19 தடுப்பு காலகட்டத்தில் எந்த ஒரு தனிமனிதனும் உண்ண உணவின்றி கைவிடப்படக்கூடாது என சமூக ஆர்வாளரும் பொதுநல சேவையாளருமான சந்திரசேகரன் ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
என்ன காரணமோ தெரியவில்லை கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரி ஒட்டுமொத்த உலகத்தையே ஆட்டிப் படைத்து கொண்டு இருக்கிறது.
இந்த நோயிலிருந்து இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் வருமானம் ஈட்ட முடியாமலும் இருப்பதால் மக்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் போய் விட்டது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
இதனை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள புத்த ஆலையங்கள் அங்காங்கே உதவி பொருட்களை வழங்கி மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி தங்களின் சமூக உணர்வை காட்டிகொண்டு இருக்கின்றனர்.
அதே போல் இந்து ஆலையங்களும் அவ்வாறு செய்ய வேண்டும்.
நாட்டில் வளமுடன் பல இந்து கோயில்கள் இருக்கின்றான, அவைகள் இனம் மதம் பேதமின்றி இந்த காலகட்டத்தில் சிரமத்தில் உள்ளவர்களுக்கு உண்ண உணவு கொடுத்து மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles