31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டாக்டர் குணராஜ் ஆதரவோடு கோத்தா ராஜா தொகுதியில் கெஅடிலான் இளைஞர் பிரிவு மக்களுக்கு பேருதவி!

🔥 Views : 7
👁 Reading Now : 50
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆதரவோடு கெஅடிலான் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் கோத்தாராஜா நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கி மின்னல் வேகத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உதவி வருகிறார்கள் என்று இளைஞர் பிரிவு தேசிய உதவி தலைவர் தீபன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
உணவுக்காக தங்கள் வீட்டின் முன் வெள்ளைக் கொடிகளை ஏற்றி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்படுகின்றன.
கோத்தா ராஜா தொகுதி கெஅடிலான் இளைஞர் பிரிவைச் சேர்ந்த சகோதரர் நந்தா உட்பட மேலும் பல உறுப்பினர்கள் வசதி குறைந்த மக்களுக்கு உதவுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
எங்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குண ராஜ் பக்கபலமாக இருந்து உதவிகளை வழங்கி வருகிறார்.
தினசரி 100க்கும் மேற்பட்டோர் உதவி கேட்டு அழைப்பு விடுக்கிறார்கள். தற்போது இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும் உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் உணவுக்காக தங்கள் வீட்டின் முன் மக்கள் வெள்ளை கொடியை ஏற்றி இருந்தால் அது தொடர்பில் 011-16374020 என்ற வாட்சாப் எண்ணில் பதிவேற்றம் செய்யும் படி தீபன் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles