
உலகை உலுக்கி கொண்டிருக்கும் டெல்டா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த டெல்டா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் சக்தியை சினோவாக் தடுப்பூசி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கோவிட் 19 தடுப்பூசியைத் தயாரிக்கும் சினோவேக் பயோடெக் லிமிடெட் நிறுவனம் இங உத்தரவாதம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சினோவேக் தடுப்பூசி பரவலாக பயன்படுத்தப்படும் பிரேசில், இந்தோனேசியா, சிலி, துருக்கி போன்ற நாடுகளில் சிறந்த பலன் கிடைத்துள்ளதை ஆய்வுகள் காட்டுவதாக அந்நிறுவனத்தின் ஆதிகாரி லியு பெய் செங் தெரிவித்தார்.
கடுமையான பாதிப்புகளிலிருந்தும் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவதிலிருந்தும் இந்த தடுப்பூசி 90 விழுக்காடு பயனைத் தருகிறது. சம்பந்தப்பட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டப் பின்னர் நோய்த் தொற்று விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் சொன்னார்.



