26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நோய்த்தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் உதவ முன்வந்தது

🔥 Views : 6
👁 Reading Now : 31

நோய்த்தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய சிலாங்கூர் தமிழ்ச்சங்கம் உதவ முன் வந்திருப்பதாக அதன் தலைவர் இல. சேகரன் மற்றும் துணைத் தலைவர் இராமச்சந்திரன் தெரிவித்தனர்.
கிள்ளான் பொது மருத்துவமனையில் மரணமடைந்தவர்களின் பிரேதங்கள் பல இன்னமும் தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளது.
இறந்தவர்களை தகனம் செய்யும் பொறுப்பை சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துச் செய்கிறது. ஒரு நாளைக்கு 10 முதல் 12 சடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். விரைவாக தகனம் செய்ய வேண்டுமானால் தனியார் மின் சுடலையை நாட வேண்டியுள்ளது.
பிரேதப்பெட்டி, வண்டி, மின் சுடலைக்கட்டணம் உட்பட 2,000 வெள்ளியை செலுத்த வேண்டியுள்ளது.
வறுமை சூழலில் உள்ளவர்கள், உடனடியாக இறுதிச் சடங்குகள் கூடச் செய்ய இயலாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவ சிலாங்கூர் தமிழ்ச் சங்கம் முன் வந்திருக்கிறது.


கிள்ளான், காப்பார் மற்றும் மேரு வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தகவல் பெறுவதற்கு சேகரன் 016 251 0752 அல்லது இராமச்சந்திரன் 012 317 1625 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles