25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வசதிக் குறைந்த மாணவர்களுக்கு கையடக்க தொலைபேசிகள்

🔥 Views : 5
👁 Reading Now : 24

பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்த்தெடுக்கப்பட்ட வசதிக் குறைந்த 10 இந்திய மாணவர்களுக்கு பத்து காவான் தொகுதி மஇகாவின் ஏற்பாட்டில் கையடக்க தொலைபேசிகள் வழங்கப்பட்டது.
பினாங்கு மாநிலத்தில் பிரபல தொழிலதிபர் எஸ்.திவாகரன் அன்பளிப்பு செய்த இந்த திறன்பேசிகள் பத்து காவான் மற்றும் பிறை வட்டார மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பத்து காவான் தொகுதி மஇகா தலைவர் சூ.இராமலிங்கம் தெரிவித்தார்.
வசதிக் குறைந்த மாணவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த உதவி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்நிகழ்வில் தொழிலதிபர் எஸ்.திவாகரன்,பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எம்.ஞானசேகரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles