25.3 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அடையாளம் தெரியாத நபர்களால் பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குனர் டத்தோ இராமச்சந்திரன் தாக்கப்பட்டார்

🔥 Views : 8
👁 Reading Now : 44

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ எம். ராமச்சந்திரன் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 7 மணி அளவில் தென் செபெராங் பிறை சிம்பாங் அம்பாட்டில் தனது வீட்டை வந்தடைந்தபோது பின்னால் வந்த நான்கு ஆடவர்கள் இவரை தாக்கியுள்ளனர்.
கத்தியால் தாக்கப்பட்டதால் இவருக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இவரை தாக்கியவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
மிகச் சிறந்த சேவையாகராக விளங்கும் இவர் தாக்கப்பட்ட சம்பவம் பினாங்கு மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது செபெராங் ஜெயா மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
டத்தோ இராமச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி ராம்சாமி கடுமையாக கண்டித்தார்.
இவரை தாக்கிய நபர்கள் மீது போலீசார் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இவரை தாக்கி காயம் விளைவித்த 4 ஆடவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ராமசாமி வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles