29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இராமச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவம சந்தேக நபர்களை நெருங்கி விட்டோம்

🔥 Views : 7
👁 Reading Now : 27

அடையாளம் தெரியாத நான்கு ஆடவர்களால்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன் பாரங்கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செபராங் பிறை மத்திய மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ஷாபி பின் அப்துல் சமாட் தெரிவித்தார்.
நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் புக்கிட் மெர்தாஜாம் அல்மாவிலுள்ள அவரது வீட்டிற்கு வெளியில் நிகழ்ந்தது.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சந்தேக நபர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக அவர் கூறினார்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருந்து வருவதாக கூறிய அவர்,இவ்விகாரத்தை போலீசார் கடுமையாகக் கருதுவதாக சொன்னார்.
இந்து அறப்பணி வாரியத்தின் ஆன்லைன் கூட்டத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த போது,காரில் வந்த முகமூடி அணிந்த நான்கு பேர்,பாரங்கத்தியால் அவரை கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
கழுத்து,கை,கால் மற்றும் உடம்பிலும் பலத்த காயங்களுடன் தற்போது அவர் செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும்,மாநிலத் துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி கூறுகையில்,சம்பந்தப்பட்டவர்களை கண்டுப் நீதியின் முன் நிறுத்த வேண்டுமென பினாங்கு போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles