
மூன்று நாட்களுக்குள் தனது பெற்றோர்களை நோய் தொற்றுக்கு பறிகொடுத்த எட்டு உடன்பிறப்புகள் பெரும் சோகத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி மக்களின் அனுதாபத்தைப் பெற்றுள்ளது.
ஒரு குடும்பத் தலைவரான பென்யாஜீத் பெர்னி ஜூலை 16 ம் தேதி இறந்தார், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது மனைவி நோரெய்னி இப்ராஹிம் இறந்தார்.
இதனால் எட்டு உடன்பிறப்புகள் மூன்றே நாட்களில் தங்களது பெற்றோரை இழந்து பரிதவிக்கிறார்கள்.
சிலாங்கூர் ஷாக்காட் வாரியம் மற்றும் சமூக நலத்துறை (ஜே.கே.எம்) உள்ளிட்ட பல இயக்கங்கள் எட்டு உடன் பிறப்புகளுக்கும் உதவிகளை வழங்கி வருகிறது.
வீட்டு வாடகையான 650 வெள்ளியை சிலாங்கூர் ஷாக்காட் வாரியம் ஏற்றுள்ளது. எட்டு உடன்பிறப்புகளுக்கும் ஜே.கே.எம் உணவு உதவிக்கு ஒரு மாதத்திற்கான 950 வெள்ளி வழங்கப்பட உள்ளது.
குடும்பத்தின் மூத்த மகளான நசுரா நபிலா பென்யாஜீத் ( வயது 19) கூறுகையில் தங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார்.
என் உடன் பிறப்புகளுக்கு ”ஸ்கிம் சிம்பனான் பெண்டிடிகன் நேஷனல் சேமிப்பு வடிவத்தில் உயர்கல்வி அமைச்சகம் தலா 500 வெள்ளி வழங்கியுள்ளது.
இந்த உதவி தனது இளைய உடன்பிறப்புகள் தங்கள் கல்வியைத் தொடர முடியும்.
பெற்றோர் மரணத்தால் ஆரம்பத்தில் நான் சோகமாக இருந்தேன் ஆனால் என் இளைய உடன்பிறப்புகளும் அழுவதை நான் கண்டபோது, நான் அழுவதை நிறுத்தினேன், ஏனென்றால் அவர்களுக்காக நான் பலமாக இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்
