29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மலேசிய தமிழர் குரல் ஏற்பாட்டில் மாதுவுக்கு சுவாசக் கருவி அன்பளிப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 53

மலேசிய தமிழர் குரல் தேசிய தலைவர் டேவிட் மார்ஷல் அளித்த தகவலின்படி மலேசிய தமிழர் குரல் கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநில செயற்குழு டமான்சாராவில் வசிக்கும் சேமுவல் தாயாருக்கு சுவாசக் கருவியை வழங்கியது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேலையில் தன் தாயார் மட்டும் சுவாசக் கருவி தினமும் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நோய்த்தொற்றினால் வருமானம் குறைந்ததால் சேமுவல் மலேசியத் தமிழர் குரல் உதவியை நாடினார். மலேசிய தமிழர் குரல் கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநிலம் சேமுவல் தாயாருக்கு சுவாசக் கருவியை வாங்கி தந்து உதவி புரிந்ததுள்ளது.
பல நல்ல உள்ளங்கள் வழங்கும் உதவியால் மக்களுக்கு உதவுகிறோம் என்று மலேசிய தமிழர் குரல் கூட்டரசு பிரதேசம் மற்றும் சிலாங்கூர் மாநில தலைவர் கணேசன் குமாரசாமி ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles