
நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் திரெங்கானு எப்சி 5-0 என்ற கோல் கணக்கில் பேரா எப்சியை வீழ்த்தியது.
திரெங்கானு எப்சி கோல்களை பைசால் ஹலிம் 18 ஆவது நிமிடத்திலும் 20 ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா, 42 ஆவது நிமிடத்தில் பையிஸ் நசீர், 71 ஆவது நிமிடத்தில் ரஹ்மாட் மகாசுப்,ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 95ஆ வது நிமிடத்தில் நிக் அனிப் ஆகியோரும் அடித்தனர்.
இந்த ஆட்டம் திரெங்கானு சுல்தான் மீஸான் சைனால் அபிடின் அரங்கில் நடைபெற்றது.
