29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நாளை காலை 11.00 மணிக்கு ஓப்பந்த மருத்துவர்கள் வேலை மறியல்

🔥 Views : 8
👁 Reading Now : 30

நாட்டில் பொது மருத்துவமனைகளில் பணி புரியும் ஒப்பந்த மருத்துவர்கள் நாளை காலை 11 மணிக்கு மறியலில் ஈடுபடுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 24 மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்கள் ஒருசேர இந்த மறியலில் பங்கேற்பார்கள் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மறியலின்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஒப்பந்த மருத்துவர்கள் தங்களது பணிகளை
இதர சுகாதார மருத்துவர்களிடம் ஒப்படைத்த பின்னர் இந்த மறியலில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து ஒப்பந்த மருத்துவர்களின் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
எங்களை சமாதானப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் இனியும் ஏமாற மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles