29 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கிள்ளான் ஹோக்கியான் மண்டபத்தில் நாளை முதல் 2,000 பேருக்கு தடுப்பூசி

🔥 Views : 6
👁 Reading Now : 31

கிள்ளான் வட்டாரத்தில் மக்களிடையே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கிள்ளான் ஹோக்கியன் மண்டபத்தில் புதிய தடுப்பூசி மையம் நாளை முதல் செயல்படும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நாளை முதல் 2,000 பேருக்கு இந்த தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.
கிள்ளான் வட்டாரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 42 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
2 லட்சம் அந்நிய தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.
மேலும் கள்ளக் குடியேறிகள் மற்றும் அகதிகளும்இருக்கிறார்கள்.
சுமார் 14 லட்சம் பேர் கிள்ளான் மாவட்டத்தில் வசிக்கிறார்கள் இதுவரை கிள்ளான் மாவட்டத்தில் 87 ஆயிரத்து 803 பேருக்கு 2 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன 2 லட்சத்து எட்டாயிரத்து 55 பேருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது கிள்ளான் வட்டாரத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தடுப்பூசி மையம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
தேசிய புற்றுநோய் கழகம் மற்றும் ஹோக்கியன் மண்டபத்தின் ஆதரவோடு இந்த மையம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles