32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசனின் நடவடிக்கையால் கம்போங் சுங்கை டுவா மக்களின் போராட்டத்திற்கு வெற்றி

🔥 Views : 6
👁 Reading Now : 28

மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் வசித்து வந்த சுமார் 60 குடும்பங்கள் அங்கிருந்துவெளியேற வேண்டுமென கேட்டுக் கொண்டப் பிறகு, அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்துஉபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசனின்துரித நடவடிக்கையால் முறையான தீர்வு காணப்பட்டது.

YB Kumaresan

அண்மையில் அங்கிருந்து இறுதியாக வெளியேற்றப்பட்ட 17 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் இழப்பீடாக 17,500 வெள்ளியும், அங்கு பாதிக்கப்பட்டசீனர்மற்றும் இந்துஆலயத்துக்கு மாற்று இடமும் வழங்க உறுதியளிக்கப்பட்டது .சம்பந்தப்பட்ட நிலத்தல் புதிய காவல் நிலையத்தை நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த இப்பிரச்னைக்கு, 2018 -ஆம் ஆண்டு இத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி யேற்ற ஆ.குமரேசன் சுமுகமாக தீர்வு கண்டுள்ளார். பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன்யாவ், துணை முதல்வர் பேராசிரியர் பி .இராமசாமி, மாநில காவல்துறை, உள்துறை அமைச்சு ஆகியோர் பேராதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கியதாகஅவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles