29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

இது பூரணமான அரசாங்கம் இல்லை!

🔥 Views : 9
👁 Reading Now : 62

நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஆதரவு தரும்படி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கேட்டுக்கொண்டார். குறிப்பாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கும்படி நாடாளுமன்றத்தில்
உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள்.
மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இப்போது சிரமமான சூழலில் நாம் அனைவரும் இருப்பதால் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நோய்த்தொற்றை கட்டுபடுத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
முன்கள பணியாளர்கள் மிகவும் சோர்வடைந்து உள்ளனர். பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் பறிதவிக்கிறார்கள்.
இந்த சூழலில் நாம் ஒருவருக்கு ஒருவர் குறை கூறாமல் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .
எனது தலைமையிலான அரசாங்கம் பூரணமானது இல்லை என்றாலும் மக்கள் படும் துன்பங்களை கண்டு காணாமல் இருந்து விட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles