27.9 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் 34 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசிகள்

சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இம்மாதம் 25ஆம் தேதி வரை 34 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
மேலும் செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மேலும் 109,547 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்தில் 863,000 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நாடு முழுவதும் 1 கோடியே 69 லட்சத்து 4 ஆயிரத்து 896 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
மொத்தம் 53 லட்சத்து 97 ஆயிரத்து 826 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 1 கோடியே 15 லட்சத்து 7 ஆயிரத்து 070 பேர் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles