29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பிரதமருக்கு வயிற்றுப்போக்கு அறிவிப்பு செய்த அரசாங்கம், அவசர காலம் ரத்து செய்யப்பட்டதை ஏன் அறிவிக்கவில்லை?

🔥 Views : 8
👁 Reading Now : 44

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உடல்நலம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பு செய்தது.
அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தொடர்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பில் ஏன் வெளிப்படையாக அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் சூம் கேள்வி எழுப்பினார்.
ஜூலை 21 ஆம் தேதியோடு நாட்டில் அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் இப்போது கூறுகிறார்.
பிரதமர் வயிற்றுப்போக்கினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிவித்த அரசாங்கம் ஏன் இந்த அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles