
ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சனை என் காலத்தில் எற்பட்டதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் என்று தெரிவித்தார்.
என் காலத்திலும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்திலும் இந்த பிரச்சனை ஏற்படவில்லை.
குறிப்பிட்ட காலத்தில் சேவையாற்றிய பின்னர்
ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தங்களுக்கு நிரந்தர வேலை வேண்டும் என்ற கோரிக்கையில் இவர்கள் மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனது காலத்திலும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்திலும் இந்த பிரச்சனை ஏற்படவில்லை.
நீண்ட காலமாக ஒப்பந்த மருத்துவர்களாக இவர்கள் பணிபுரிவதால் இன்று இந்த பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பொது மருத்துவமனைகளில் பணி புரியும் ஒப்பந்த மருத்துவர்கள் நேற்று கருப்பு ஆடைகளை அணிந்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டாலும் ஒப்பந்த மருத்துவர்கள் அமைதியான முறையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நாடு தழுவிய அளவில் இந்த மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
