29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அவசரகால சட்டம் ரத்தானதால் சரவா சட்டமன்றமும் கலைந்தது

🔥 Views : 6
👁 Reading Now : 36

நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தக்கியூடின் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அவசர காலத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து சட்டங்களும் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதியோடு அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டதாக டத்தோஸ்ரீ தக்கியூடின் தெரிவித்தார்.
ஜூலை 20ஆம் தேதி ஒரு அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் சரவா சட்டமன்றமும் கலக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இன்னும் 60 நாட்களில் சரவா சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
குறிப்பாக வரும் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் சரவா சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் முகமட் பாத்தி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles