
பெர்சத்து கட்சியின் 11லட்சத்து 20,000 வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக தனக்கு எதிராக கொண்டு வரப்பட்டு இருக்கும் இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து சைட் சாடிக் விசாரணை கோரி உள்ளார்.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான சைட் சாடிக்கிற்கு 3 லட்சத்து 30,000 வெள்ளி ஜாமீன் தொகையை நீதிமன்றம் விதித்துள்ளது.
முன்னதாக 80,000 வெள்ளி ஜாமின் தொகையை இவர் செலுத்தினார்.
மீதமுள்ள ஜாமீன் தொகையை செலுத்த நிதி திரட்டும் இயக்கத்தை தொடங்கினார்.
இந்த இயக்கத்தை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 7 லட்சம் வெள்ளியை திரட்டி சாதனை படைத்தார்.
இந்நிலையில் இன்று 2 லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளி ஜாமீன் தொகையை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் செலுத்தினார்.
