33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

நாடாளுமன்றத்தில் மீண்டும் பெரும் அமளி! அவசரகால உத்தரவு மீட்டுக் கொண்டது தொடர்பில் மாமன்னர் ஆலோசனை பெறப்பட்டதா?

🔥 Views : 7
👁 Reading Now : 70

இன்று இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
அவசரகால உத்தரவு மீட்டு கொள்ளப்பட்டது தொடர்பில் சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அவசரகால உத்தரவு ஜூலை 21ஆம் தேதியோடு மீட்டுக்கொள்ள பட்டதாக நேற்று நாடாளுமன்றத்தில் தக்கியூடின் அறிவித்தார்.
இந்த அவசரகால உத்தரவை மீட்டுக் கொண்டது தொடர்பில் ஏன் அறிவிப்பு செய்யப்படவில்லை.
மேலும் இது மீட்டுக் கொண்டது தொடர்பில் மாமன்னரின் ஆலோசனை பெறப்பட்டதா என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் மற்றும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாமி பாட்சில் ஆகியோர் கேள்விகளை எழுப்பினர்.
இந்த அவசர உத்தரவை ரத்து செய்வது தொடர்பில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மாமன்னரை சந்தித்து அனுமதி பெற்றாரா என்றும் இவர்கள் கேள்வி எழுப்பியதால் நாடக மன்றத்தில் அனல் பறந்தது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை ரத்துசெய்து செய்தது தொடர்பில் மாமன்னரின் அனுமதி பெறப்பட்டதா என்பது இன்னும் தெளிவாக இல்லை என்று சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles