33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

2 லட்சம் வெள்ளி பரிசுகளுடன் குயில் மாணவர் விழா 2021

🔥 Views : 8
👁 Reading Now : 42

நாட்டில் புகழ் பெற்ற ஜெயபக்தி குயில் மாணவர் விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று வெற்றி மழையில் நனைந்த மாபெரும் விழா இம்முறையும் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஜெயபக்தி குயில் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்
2021 ஆண்டு குயில் மாணவர் விழா 2 லட்சம் வெள்ளி பரிசுகளை கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
கட்டுரை எழுதுதல் (தமிழ், மலாய், ஆங்கிலம்), பேச்சுப் போட்டி, எழுச்சிப் பாடல் பாடுதல், பரதம், ஓவியப் போட்டி, ஆத்திசூடி ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
போட்டிகள் அனைத்தும் கணினி படைப்புகள் அல்லது காணொலி படைப்புகள் வழி நடத்தப்படவுள்ளன. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் மின்னியல் நற்சான்றிதழும் 10 வெற்றிக்கான புத்தகப் பற்றுச்சீட்டும் வழங்கப்படும்.
இதுவரை 12,000 மாணவர்கள் தங்களைப் பதிவு செய்துவிட்ட வேளையில் இன்னும் பதிவு செய்யாத மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிவு செய்துவிடுமாறு கேட்டுக் கொள்வதாக டத்தோ கு. செல்வராஜா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles