
நாட்டில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரம் அடைந்திருக்கும் வேளையில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 923 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தேசிய தடுப்பூசி பணிக்குழு அறிவித்தது.
நேற்று சிலாங்கூர் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட வேளையில் கோலாலம்பூரில் 85 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதுவரை நாட்டில் ஒரு கோடியே 78 லட்சத்து 39 ஆயிரத்து 476 பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
