25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

எனது இருக்கையை மாற்றி விடுங்கள்; தெங்கு ரசாலி ஹம்சா விண்ணப்பம்

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி வரிசையில் இருந்து தமது இருக்கையை மாற்றி விடும்படி
கிளந்தான் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரசாலி ஹம்சா ஹம்சா இன்று சபாநாயகர் டத்தோ அஸாஹர் அஸிஷானிடம் விண்ணப்பம் செய்துள்ளார்.
தோல்வி கண்ட அரசாங்க வரிசையில் அமர்வதை நான் விரும்பவில்லை.
மேலும் நான் அரசாங்க ஆதரவாளர் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டிருக்கும் தெங்கு ரசாலி ஹம்சா மற்றும் மாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அமாட் ஜஸ்லான் ஆகியோர் ஆளும் கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அம்னோ எம்பிக்கள் ஆளும் கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமருக்கு வழங்கிய ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்ட போதிலும் இன்னமும் எம்பிக்கள் ஆளும் கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles