25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கார் விபத்தில் இந்தியத் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர்!

கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் இந்தியத் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பேரா ஜாலான் சித்தியவான் – சங்காட் செர்மின் 7 ஆவது கிலோமீட்டரில் கம்போங் கொலும்பியா,ஆயர் தாவார்
சாலை சந்திப்பில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் கணவர் ஆர்.இளங்கோ ( வயது 51) மனைவி எஸ்.தவசெல்வி ( 43 ) பலத்த காயங்களுடன் சம்பவம் நிகழ்ந்த
இடத்திலேயே உயிரிழந்தனர்.
பொதுமக்களால் காரிலிருந்து இருவரும்
வெளியில் கொண்டு வரப்பட்டப் பின்னர் கார் தீப்பிடித்து எரிந்தது.
சித்தியவான் கம்போங் ஆச்சேயில் தொழிற்சாலையில் வேலை செய்து
வரும் தமது மனைவியை காரில் ஏற்றிக் கொண்டு,ஆயர் தாவார் திரும்பிக்
கொண்டிருந்த போது,கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர மின்சாரக்
கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles